நீங்கள் முட்டை அதிகம் சாப்பிடுபவர்களா? இது உயிருக்கே உலை வைத்து விடும்.. ஆபத்தை உணர்ந்து கொள்ளுங்கள்!!
நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று முட்டை.இதன் விலை மிகவும் மலிவு என்பதினால் அடிக்கடி வாங்கி சமைத்து உண்டு வருகிறோம்.இந்த முட்டையில் அதிகளவு
கால்சியம்,பாஸ்பரஸ்,புரதம்,செலினியம்,போலிக் அமிலம்,இரும்பு மற்றும் அயோடின் இருக்கின்றது.இவை எலும்பு வளர்ச்சி,நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது.ஒரு முட்டையில் சராசரியாக வைட்டமின் டி 82%,ஃபோலேட் 50%,வைட்டமின் பி2 25%, செலினியம் 40% இருக்கிறது.அதேபோல் வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ,பி5 மற்றும் பி12 உள்ளது.
இந்த முட்டையில் பொரியல்,பாயில் முட்டை,வறுவல்,சில்லி,குழம்பு,ஆப் ஆயில்,ஆம்லெட் உள்ளிட்ட பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இதன் மணமும் சுவையும் அருமையாக இருப்பதால் நம்மில் பெரும்பாலானோர் இதில் இருக்கும் ஆபத்தை உணராமல் இதை அதிகம் விரும்பி உண்டு வருகிறோம்.
தினமும் 1 அல்லது 2 முட்டை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.ஆனால் ஒரு சிலர் முட்டையை உணவாக எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
*உடல் எடை அதிகம் இருப்பவர்கள்,கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முட்டையை உணவாக எடுத்து கொள்வதை தவிர்க்கவும்.
*அதேபோல் சிறுநீரக பிரச்சனை அவதிப்பட்டு வரும் நபர்கள் முட்டை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்கள் முட்டை பக்கம் தலை வைத்து கூட படுக்க கூடாது.
*முட்டை ஒரு சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
*அதிகளவு முட்டை உண்பதால் உடல் சூடு அதிகரிக்கும்.இதனால் பித்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
*அதிகளவு முட்டை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை,வயிறு கோளாறு உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.ஏற்கனவே வாயு தொல்லையால் அவதிப்பட்டு வரும் நபர்கள் முட்டையை உணவாக எடுத்து கொள்வதை தவிர்க்கவும்.
*முட்டையை அதிகபட்சம் 7 நிமிடங்கள் வரை வேகவைத்தால் போதும்.அதன் பின் அதிக நேரம் வேக வைத்து சாப்பிடுவதால் அவை உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.