பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!!

Photo of author

By Divya

பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!!

உங்களில் பலருக்கு பிடித்த மாமிசத்தில் ஒன்று பன்றி.இந்த இறைச்சி மிருதுவாகவும்,அதிக கொழுப்பு அடுக்குகளை கொண்டதாகவும் இருக்கும்.உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள பன்றி இறைச்சி பெரிதும் உதவுகிறது.அதேபோல் இந்த இறைச்சியில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிகளவு இருப்பதால் இவை எலும்பு வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதப்படுகிறது.

பன்றி இறைச்சியில் குழம்பு,சில்லி,வறுவல் என்று பல உணவுகள் தயாரித்து உண்டு வருவது வழக்கம்.மற்ற இறைச்சிகளின் சுவையை காட்டிலும் பன்றி இறைச்சி தனி சுவையை கொண்டிருக்கும்.கிராமங்களில் அம்மை போட்ட நபருக்கு பன்றி இறைச்சி சமைத்து கொடுப்பது வழக்கம்.காரணம் உடல் சூடு குறையும் என்பது தான்.இந்த வகை இறைச்சிகளில் சில நன்மைகள் இருந்தாலும் இவை உடலுக்கு அதிகளவு தீங்கு விளைவிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

பன்றி இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் பாதிப்புகள் அதிகம் இருக்காது.ஆனால் வெந்தும் வேகாமலும் அதேபோல் பச்சையாகும் சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு பல்வேறு தீங்குகளை இவை உண்டாகி விடும்.

பன்றி இறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்:-

*ருசியாக இருக்கும் இந்த பன்றி இறைச்சியால் 70 வகையான நோய் பாதிப்புகளை நம் உடல் சந்திக்க நேரிடும் என்றால் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.முதலில் அதிகளவு பன்றி இறைச்சி சாப்பிடுவது அதேபோல் அடிக்கடி செய்து சாப்பிடுவது என்று இருந்தால் உடலில் வாதம் மற்றும் பித்தம் அதிகரிக்க நாமே காரணமாகி விடுவோம்.

*அடிக்கடி பன்றி இறைச்சியை ருசிப்பதால் உடல் வலி,அசதி ஏற்படும்.அதவேளை கபம் பெருக அதிக வாய்ப்பு இருக்கிறது.

*பன்றி இறைச்சியை அரைவேக்காடாக சமைத்து உண்டோம் என்றால் வயிற்றில் ஊசிப்புழு,கொக்கிப்புழு,வட்டப்புழு,குடற்புழு உள்ளிட்டவை உற்பத்தியாகும்.

அதேபோல் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அலற விடும் நாடாப்புழு உருவாகி விரைவில் வளர்ந்து வயிற்று வலி ஏற்ப்படும் நிலை உருவாகி விடும்.

*தொடர்ந்து பன்றி இறைச்சி சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்களுக்கு அவை சிறந்த உணவாக மாறி விடுகிறது.இதனால் அதிகளவு முட்டையை இட்டு மனித உடலில் இருக்கும் உறுப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கச் செய்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று சேர்த்து விடும்.இந்த நாடாப்புழு மனித மூளையில் நுழைந்தால் நினைவாற்றல் சக்தி முழுமையாக இழக்கும் சூழல் ஏற்பட்டு விடும்.அதனோடு நாடாப்புழு முட்டை மாரடைப்பு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது.

*பன்றி இறைச்சியை அடிக்கடி உணவில் எடுத்து வந்தோம் என்றால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.அதுபோல் மனித ஈரல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு விடும்.

*இந்த பன்றி இறைச்சி சிலருக்கு சேராது.ஒருவேளை அவர்கள் சாப்பிட்டார்கள் என்றால் உடம்பில் புண்கள் இருக்கும் பட்சத்தில் அவை எளிதில் ஆறாது.

*பன்றி இறைச்சியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய திரிகூரா திச்சுராஸிஸ் என்ற குடற்புழு இருக்கிறது.இவை உடலுக்குள் என்றால் மனிதன் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி மரணத்தை தழுவும் சூழல் ஏற்பட்டு விடும்.எனவே இந்த வகை இறைச்சியை நன்கு வேக வைத்து உண்டால் இந்த’வகை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.