காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்!!? இதனால் எத்தனை அபாயங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

Photo of author

By Sakthi

காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்!!? இதனால் எத்தனை அபாயங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

Sakthi

காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்!!? இதனால் எத்தனை அபாயங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலரும் வேலைக்கு கிளம்பும் பொழுதும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பொழுதும் நேரம் இல்லை என்ற காரணத்தை முன் வைத்து காலை உணவு வகைகளை தவிர்த்து விடுகின்றோம். ஆனால் காலை உணவை உண்ணாமல் தவிர்த்து விடுவது உடலுக்கு பல அபாயங்களை ஏற்படுத்துகின்றது.

நாள் முழுவதிற்கும் தேவைப்படும் ஆற்றல் நமக்கு காலை உணவில் இருந்து மட்டுமே கிடைக்கின்றது. ஆனால் உடல் எடையை குறைக்கிறேன், நேரமின்மை போன்ற காரணங்களால் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து விடுகின்றோம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காலை உணவுகளை தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்…

* காலை உணவை சாப்பிடமால் தவிர்ப்பதால் நமக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

* காலை உணவை சாப்பிடமால் தவிர்க்கும் பொழுது இரத்த அழுத்தம் இயல்பை விட குறைந்து விடுகின்றது.

* காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கும் பொழுது குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

* காலை உணவை சாப்பிடுவதை தவிர்க்கும் பொழுது உடலில் சுரக்கும் டோபோமைன் ஹார்மோன்கள், செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறைகின்றது.

* காலை உணவை சாப்பிடாமல் தவிர்க்கும் பொழுது வாய்ப்பகுதியில் கிருமிகள் அதிகமாகின்றது. இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படத் தொடங்குகின்றது.

* காலை உணவுகளை சாப்பிடமால் தவிர்ப்பதால் வயிற்று வலி, வயிற்றில் புண் ஆகியவை ஏற்படுகின்றது.

* காலை உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதால் செரிமானக் கோளாறுகளும் ஏற்படுகின்றது.