கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

0
30
#image_title

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் எரிச்சல் என்ற பிரச்சனை ஏற்படுகின்றது. டிவி, செல்போன், கணினி முதலானவற்றை தொடர்ந்து பார்க்கும் பொழுது கண் எரிச்சல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த கண் எரிச்சல் பிரச்சனையை குணப்படுத்தும் எளிமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கண் எரிச்சலை குணப்படுத்த இந்த பதிவில் மூன்று பொருட்களை பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் மருந்து ஒன்று தயாரிக்கப் போகிறோம். அதற்கு என்னென்ன பொருள்கள் தேவை, எவ்வாறு தயார் சொய்வது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இதற்கா தேவையான பொருள்கள்…

* நல்லெண்ணெய்
* வெங்காயம்
* புளியமரத்தின் இலைகள்

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

முதலில் புளிய மரத்தின் இலையை நன்கு இடித்து அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சிறிதளவு நல்லெண்ணெயை ஒரு பவுலில் சேர்த்து அதில் வெங்காயச் சாறு, புளியமரத்தின் இலைச் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த எண்ணெயை தலையால் தேய்த்து சிறிது நேரம் காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.

இதன் மூலம் கண் எரிச்சல் குறையும். கண்களில் குளிர்ச்சி ஏற்படும். மேலும் கண்கள் சிவந்து காணப்படுவது குறையும். கண் வலி ஏற்படுவது குறையும். உடல் புத்துணர்ச்சி பெறும்.