நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! 

0
475
#image_title

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்!

நொறுக்கு தீனி என்பது நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய நொறுக்குத்தீனிகளோ பல்வேறு நோய் களை தரக்கூடியதாக உள்ளது. Noodles, chips, கண்ணை கவரும் பாக்கெட் உணவுகள் மற்றும் Pizza burger இவைகள் தான் இன்றைய நொறுக்குத்தீனிகள்.
இவைகள் ஒருபோதும் ஆரோக்கியத்தை கொடுக்காது.
இவைகளை எல்லாம் என்றோ ஒருநாள் சாப்பிட்டாலாம். தொடர்ந்து சாப்பிட்டால் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கி நாளடைவில் ஆரோக்கியத்தை உருக்குலைத்து விடும்.

உண்மையில் நொறுக்கு தீனி என்பது அனைத்து சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்திடும் ஐந்து ஸ்நாக்ஸ் பற்றி பார்ப்போம்.

1. உலர் திராட்சை:
விலை மலிவாக எளிதில் கிடைக்கக்கூடிய இந்த உலர் திராட்சை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை என்ற பிரச்சனைக்கு வழி இருக்காது.
முக்கியமாக ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது அதேபோன்று சிறுநீரக பாதையில் தொற்று ஏற்படாது.
உடல் வெப்பத்தை தணிக்க கூடியது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மாதவிடாய் பிரச்சனை போக்கக்கூடியது.
அதேபோன்று எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் இதில் வளமாக இருப்பதால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு பலகீனம் ஏற்படுவதையும் தடுக்கலாம். மேலும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கக் கூடியது.

2. பேரிச்சை:
இதில் உள்ள செலினியம் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.எனவே எலும்பு தேய்மானம் எலும்பு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம்.
அதேபோன்று இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை தவிர்க்க முடியும் முக்கியமாக இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதோடு குடல் இரக்கத்தையும் சீர் செய்கிறது.
இதில் உள்ள அதிக அளவு இரும்புச் சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கவும் மேலும் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றக் கூடியது. இதைத் தொலைபேசி இரக்கக் கூடியது முக்கியமாக இதனை தினம் மூன்று சாப்பிட்டு வரும் போது உடல் வலிமையும் சக்தியும் அதிகரிக்கும் சருமத்தையும் பொலிவாக வைத்துக் கொள்ளும் .

3. சிவப்பு அவல்:
சிவப்பு அவலானது சிவப்பு அரிசியில் இருந்து பெறப்படுகிறது. இதில் உள்ள அந்தோ சயனின்என்ன நிறமி தான் இந்த அரிசிக்கு இந்த நிறத்தை அளிக்கிறது.
இந்த சிவப்பு அவலில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும் எனவே, அவலை சாலட் போன்று செய்து சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி ஆனது அவலில் இருக்கும் இரும்பு சத்து உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

4. எள்ளு மிட்டாய்:
பால் சாப்பிட பிடிக்காதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும் வீக்கத்தையும் குறைக்கும். காரணம் இதில் உள்ள தாமிரம், கால்சியம், மெக்னீசியம், போன்றவை மூட்டுகளில் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது .முக்கியமாக எள்ளில் இரும்புச் சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளதால் எள்ளுருண்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரையை தடுக்க முடியும்.
மேலும் தலைமுடி உதிர்வது குறையும் அதேபோன்று ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள்ளுருண்டையை எல்லோருமே சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில்ஏற்படும் சிரமம் குறையும் உடல் சக்தியும் அதிகரிக்கும்.
முக்கியமான மூளை மற்றும் நரம்புகளில் இருக்கும் தளர்ந்து உடல் மன அமைதி அடையும், படபடப்பு தன்மை மறையும்.

5.காய்கறி சாலட்: ( Salad )
காய்கறி சாலட் என்பது வேக வைக்காமல் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள் சிறிய துண்டுகளாக கட் செய்து ,மிளகுத்தூள் எலுமிச்சை சாறு உப்பு கலந்து சாப்பிடலாம்.இப்படி காய்கறி சாலட் செய்து சாப்பிடுவதன் மூலம்இதன் சத்துக்கள் அழியாமல் முழுமையாகக் கிடைப்பதோடு அவற்றுள்ள பெட்ரோ கெமிக்கல் புற்றுநோய் செல்கள் தாக்காமல் உடலை பாதுகாக்கும் .

உண்மையில் இது போன்ற ஆரோக்கிய நொறுக்கு தீனிகள் சாப்பிட்டு வந்தால் நமது உடல் என்றுமே ஆரோக்கியமாக இருக்கும்.அடிக்கடி மருத்துவரிடம்செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முக்கியமாக கண்களை கவரும் கடைகளில்இருக்கும் தீனிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள அதிக கொழுப்பால் கொலஸ்ட்ராலும் ட்ரை கிளிசரைடும் அதிகரித்து பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம்.
இதனால் வருங்காலத்தில் பல நோய்களுக்கு அடிப்படையாக அமைந்துவிடும் எனவே முடிந்தவரை இங்கே பார்த்த எளிதான எந்த தீங்கும் தராத ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். நோய் பற்றிய எந்தவித பயமும் தேவையே இருக்காது.

Previous articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!
Next articleஇவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!