டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!
இரண்டு ஆண்டுகள் கடந்து தற்பொழுது தான் பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அதன் முடிவுகளும் வெளிவந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.மேலும் பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு நடைபெற உள்ளது.
அவர்களுக்கான ஹால்டிக்கெட் டையும் வழங்கி வருகின்றனர்.அதனையடுத்து சிபிஎஸ்சி முடிவுகள் வெளிவரவில்லை.அதனால் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு கால அவகாசம் கொடுத்திருந்தார். அவ்வாறு கொடுத்திருந்த நிலையில் நேற்று சிபிஎஸ்இ முடிவுகள் வெளிவந்தது. இதனையடுத்து இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் சிபிஎஸ்சி முடித்த மாணவர்கள் அரசு பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும் டிப்ளமோ முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகளும் தற்போது வரை வெளிவரவில்லை. மேற்கொண்டு அவர்கள் இன்ஜினியரிங் சேர்வதற்கு ஆகஸ்ட் 3 வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மூன்று குள் டிப்ளமோ தேர்வுகள் வெளிவந்து விடும். மேற்கொண்டு மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.