எப்பொழுதும் சோகமாக இருப்பவர்களா நீங்கள்! இந்த 6 பழங்கள் சாப்பிட்டால் உடனே ஹேப்பி ஆகிருவீங்க
எப்பொழுதும் சோகமான மனநிலையில் உள்ளவர்கள், மனக்கவலை, மனநிலை மாற்றங்கள் பான்ற மனநிலை சார்ந்த பிரச்சனைகள் நமக்கு ஏற்படும். அந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமான மனநிலைக்கு திரும்ப இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த 6 பழங்களை சாப்பிட்டால் போதும்.
சோகமான மனநிலையில் இருந்து விடுபட சாப்பிட. வேண்டிய 6 பழங்கள்…
1. பெர்ரி
2. அன்னாச்சி
3. எலுமிச்சை
4. தக்காளி
5. வாழைப்பழம்
6. ஆரஞ்சு
பெர்ரி…
பொதுவாக பெர்ரி பழங்கள் பல வகைகளில் உள்ளது. அவற்றில் ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் ஆகியவை சுவை மிகுந்தது. அதே போல இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிக அளவில் இருக்கின்றது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்ப்பு போராடுகின்றது.
பெர்ரி பழ வகைகள் நம்முடைய மனநிலை கோளாறுகளுடனும் தொடர்புடையது. இவற்றில் அதிகளவில் விட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவை நமது உடலில் மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய டோபோமைனின் அளவை அதிகரிக்க உதவுகின்றது.
அன்னாச்சி…
அன்னாச்சி பழமும் நம்முடைய மனநிலையுடன் தொடர்புடைய ஒரு பழ வகை தான். அன்னாச்சி பழத்தில் அதிக அளவில் புரோமெலைன் உள்ளது. இது நமது உடலில் வீக்கத்தை குறைக்க உதவி செய்கின்றது. மேலும் செரோடோன் அளவை அதிகரிக்க செய்கின்றது. எனவே சோகமான.மனநிலையுடன் இருக்கும் பொழுது அன்னாச்சி பழம் சாப்பிடலாம்.
எலுமிச்சை…
எலுமிச்சம் பழமும் நம்முடைய சுகமான மனநிலையை ஹேப்பியாக வைத்துக் கொள்ளை உதவி செய்யும் பழங்களில் ஒன்று. இந்த எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இந்த இரண்டு சத்துக்களும் ஒருவருடைய மனநிலையை மேம்படுத்துகின்றது. இந்த எலுமிச்சம் பழம் ஒருவருக்கு உடனடி ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் தரும் பழ வகையாகும்.
தக்காளி…
தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவதை நாம் தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் இதை மனநிலையை மகிழ்ச்சியாக மாற்ற பயன்படுத்த முடியுமா என்று கேட்டால் முடியும். தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை பயக்கும். தக்காளியின் சதைப் பகுதியை மட்டும் சாப்பிடாமல் தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றலும் பல வகையான சத்துக்களும் கிடைக்கின்றது.
வாழைப்பழம்…
வாழைப்பழத்தை நாம் அதிகமாக மலசிக்கலுக்கு மருந்தாகவும் பூஜைக்கு பொருளாகவும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் வாழைப்பழம் அதைத் தவிர மனநிலையை சிறந்த முறையில் பாதுகாக்கும் பழமாகும். வாழைப்பழத்தை விட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது செரோடோனின் அளவை அதிகரிக்கவும் மனநிலையை ஒழுங்குபடுத்தும் நரம்பியக்க கடத்தியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமில்லாமல் வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது மனதுக்கு அமைதியை கொடுத்து மனதிற்கு தளர்வு உணர்வை ஊக்குவிக்கின்றது.
ஆரஞ்சு…
பிற சிட்ரஸ் பழங்களை போலவே ஆரஞ்சு படத்திலும் விட்டமின் சி சத்து அதிகளவில் இருக்கின்றது. நமது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவி செய்கின்றது. மேலும் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் காய்ந்ததும் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமில்லாமல் நமக்கு புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தருகின்றது.