உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்!

Photo of author

By Divya

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்!

நம்மை முன்னேற விடாமல் செய்வதில் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக உள்ளது.கண் திருஷ்டி நம் வாழ்வில் சோதனைக்கு மேல் சோதனையை கொடுக்கும்.கண் திருஷ்டி தானாக ஏற்படுவதில்லை.நம் வளர்ச்சி மீது பொறாமை கொண்டிருக்கும் சில தீய சக்திகளால் ஏற்படக் கூடியது.எதிரிகளை விட நம் கூடவே இருப்பவர்களால் தான் கண் திருஷ்டி,பில்லி,சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.கண் திருஷ்டி மட்டும் ஏற்பட்டு விட்டது என்றால் வாழ்வில் நிம்மதி போய்விடும்.எதை தொட்டாலும் அவை தோல்வியில் முடியும்.

அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுதல்,உடல் சோர்வு ஆகியவை கண் திருஷ்டிக்கான காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த கண் திருஷ்டி படாமல் இருக்க பலர் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆன்மீக வழிகளில் தீர்வு காண்பார்கள்.

சிலர் தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி படாமல் இருக்க தினமும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி மஞ்சள் குங்குமம் தடவி கடையின் வாசலில் வைப்பார்கள்.ஆனால் இப்பொழுது சொல்லப்படும் ஆன்மீக வழியை பின்பற்றினால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்.

ஒரு கற்பூரம்,ஒரு இலவங்கம்,3 கல் உப்பை வைத்து தூபம் போடவும்.இந்த புகை வீடு,கடை முழுவதும் பரப்பவும்.இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி முழுமையாக அழிந்து விடும்.எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.