இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

0
182
#image_title

இதை தடவினால் வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!

ஆண்,பெண் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை முடி உதிர்தல்.இதை கட்டுப்படுத்தி இழந்த முடியை மீண்டும் வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை
2)வெங்காயச் சாறு

செய்முறை:-

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.

இதை தலை முழுவதும் அப்ளை செய்து 45 நிமிடங்களுக்கு பின்னர் தலையை அலசவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலை முடி நன்கு வளரத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய்
2)வெட்டி வேர்

ஒரு பாட்டிலில் 1/2 லிட்டர் சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றி 1/4 கைப்பிடி அளவு வெட்டி வேர் போட்டு ஊற வைக்கவும்.இந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் தலை முடி கருமையாகவும்,அடர்த்தியாகவும் வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை
2)தேங்காய் எண்ணெய்
3)செம்பருத்தி இதழ்

அரை கப் கறிவேப்பிலை மற்றும் 1/2 கப் செம்பருத்தி பூ இதழை நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

பின்னர் இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு தலைக்கு உபயோகித்து வந்தால் தலை முடி அசுர வேகத்தில் வளரத் தொடங்கும்.