வீட்டில் உளுந்து இருக்கா? தோல் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும் ரெமிடி! உடனே ட்ரை பண்ணுங்க!
தோல் சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து ஆயுர்வேத மருந்துகளிலும் உளுந்து பயன்படுத்தப்படுகிறது.
இதில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளதால் தோல் மற்றும் சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது.
வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்பு உளுந்துக்கு சத்து அதிகம். தோல் நீக்காத இந்த கருப்பு உளுந்து உடல் சருமத்தை பளபளப்பாகும்.
உளுத்தம் பருப்பில் இயற்கையாகவே ஆன்டி செப்டிக் தன்மை இருப்பதால் முகத்தில் உண்டாகும் முகப்பருக்களை தடுத்து, முகத்தை பளபளப்பாக மாற்றும்.
தேவையான பொருட்கள்.
• உளுத்தம் பருப்பு
• மஞ்சள் தூள்
• ரோஸ் வாட்டர்
செய்முறை:
1. உளுத்தம் பருப்பை வாணலி போட்டு மிதமான சூட்டில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. வருத்த உளுத்தம் பருப்பை, காய்ந்த கட்டி மஞ்சளுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது இந்த கலவையை கண்ணாடி பாட்டில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
உளுத்தம் பருப்பு பொடியை நான்கு ஸ்பூன், ரோஸ் வாட்டரில் கலந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். மேலும் இதனை முகத்தில் மாஸ் போன்று பயன்படுத்த வேண்டும். பின்னர், 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
இதனை, இவ்வாறு வாரத்தில் நான்கு நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி, முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.