மொறு மொறு மீன் பக்கோடா.. எப்படி செய்வது?

0
91

மீனில் பல ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.வழக்கமான குழம்பு, வறுவல் போல இல்லாமல் மீனில் சுவையான மொறு மொறு பக்கோடா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்,

தேவையானவை :

முள் நீக்கிய மீன் துண்டுகள் – கால் கிலோ முட்டை – 2 சோளமாவு – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கு

mii

முள் நீக்கிய மீன் துண்டுகளை கழுவி வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், முட்டையை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளுங்கள்.

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் மீன் துண்டுகளை போட்டு கலந்து கொள்ளுங்கள்.

அரைமணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

அதன்பின்,அடுப்பில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மீனை போட்டு பொறித்தெடுத்தால் சுவையான மீன் பக்கோடா தயார்.