நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!

Photo of author

By Divya

நகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!

உங்கள் நகைகளை வீடு வாங்கவோ, திருமணத்திற்காகவோ, கடன் கொடுக்கவோ, நிலம் வாங்கவோ, படிப்பு செலவிற்காகவோ, மற்ற எதாவது செலவிற்காகவோ விற்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த நாளில் இந்த ஓரையில் விற்கவும். இப்படி செய்யும் போது மீண்டும் நகை வாங்கும் பாக்கியம் உருவாகும்.

செவ்வாய்க் கிழமை மற்றும் வியாழக் கிழமை அன்று சுக்ர ஓரை அல்லது குரு ஓரையில் உங்கள் தங்கத்தை விற்று திரும்பி வரும்போது வீட்டிற்கு போகும் முன்னர் அந்த பணத்தில் இருந்து சிறிய மூக்குத்தியாவது தங்கமாக வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அந்த மூக்குத்தியை கவரோடு பூஜை அறையில் வைத்து வணங்கி பின் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி அதன் மீது இரவு முழுக்க வைத்து பின் பீரோவில் எடுத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது தங்கம் மறுபடியும் வாங்கும் யோகம் கிடைத்து தங்கம் வீட்டில் சேரும்.