திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!!
வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணமலையில் கிரிவலம் நடைபெற இருக்கிறது. இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள திரண்டு வருவார்கள்.
இதனால் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயப்பட்ட உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் அதிநவீன சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை அரசு விரைவு போக்குவரத்து கழகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் இன்று காலை ஐந்து மணி முதல் மொத்தம் 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்துகள் அனைத்தும் திருப்பதி மத்திய பேருந்து நிலையத்திற்குள் வந்து போகும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் அமராவதி, கருடா, இந்திரா, ஏசி மற்றும் ஏசி அல்லதா சூப்பர் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் என்று பல இயக்கப்பட்ட உள்ளது.
இதுவரை இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு பாதி முடிவடைந்து விட்டது. தற்போது முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான கட்டணத்தில் பத்து சதவிகிதம் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.எனவே, இதற்கான சிறப்பு பேருந்துகள் இன்றும் நாளையும் இயக்கப்பட்ட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போலவே, எனவே ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3 மணி, 4 மணி, 5 மணிக்கு திருவண்ணாமலை செல்வதற்கும், திரும்ப திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 3 மணி, 4 மணி, 5 மணிக்கு சென்னை திரும்பி வரவும் இந்த பேருந்துகள் புறப்பட தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.