ஆண்களே உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுதா!!! அப்போ இந்த டிரிங்க் மட்டும் மறக்காம குடிங்க!!!

Photo of author

By Sakthi

ஆண்களே உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுதா!!! அப்போ இந்த டிரிங்க் மட்டும் மறக்காம குடிங்க!!!

கல்யாணம் ஆகப் போகும் ஆண்கள் குடிக்க வேண்டிய முக்கியமான பானங்கள்(டிரிங்க்) பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கல்யாணம் ஆகப்போகும் ஆண்கள் இந்த பானத்தை தயார் செய்து குடித்து வந்தால் அவர்களுக்கு ஆண்மை சக்தி அதிகரிக்கும். மேலும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. இந்த டிரிங்க் தயார் செய்ய என்ன பொருள்கள் தேவை, எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த டிரிங் தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* பாதாம் பிசின்
* பேரிச்சை
* பாதாம்
* பிஸ்தா
* கசகசா
* ஜாதிக்காய்
* ஏலக்காய்
* வெள்ளரி விதை
* பால்
* மஞ்சள் தூள்
* தேன்

இந்த டிரிங்க்கை தயார் செய்யும் முறை…

முதலில் பாதாம் பிசின் சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பவுல் எடுத்து அதில் வெள்ளரி விதை, ஏலக்காய், கசகசா, பாதாம், பிஸ்தா, பேரிச்சை, ஜாதிக்காய் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து அதையும் 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இரண்டும் பத்து மணி நேரம் ஊறிய பிறகு பாதம் பிசினை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த விதைகளை மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் இல்லாமல் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து அதில் பால் தேவையான அளவு ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து காய்ச்ச வேண்டும். பின்னர் அடுப்பை ஆப் செய்து விட்டு இந்த பாலை ஒரு டம்ளருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் காய்ச்சிய இந்த பாலில் ஒரு ஸ்பூன் பாதாம் பிசின், ஒரு ஸ்பூன் அறைத்து வைத்துள்ள நட்ஸ் கலவை, ஒரு வ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இதை தூங்கச் செல்வதற்கு முன்னர் தினமும் குடிக்க வேண்டும். இதனால் ஆண்மை பலமடங்காக பெருகும்.