உங்கள் கண் புருவம் அடர்த்தியாக தெரிய மை வைத்து தீட்டுகிறீர்களா? ஆனால் இந்த பொருள் இருந்தால் இயற்கையாவே பலன் கிடைக்கும்!!

உங்கள் கண் புருவம் அடர்த்தியாக தெரிய மை வைத்து தீட்டுகிறீர்களா? ஆனால் இந்த பொருள் இருந்தால் இயற்கையாவே பலன் கிடைக்கும்!!

பெண்கள் தங்களின் புருவத்தை அடர்த்தியாக காட்ட கண் மை வைக்கின்றனர்.சிலர் இரசாயனம் கலந்த பொருட்களை கண் புருவங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

இதை தவிர்த்து இயற்கையான பொருட்களை கொண்டு கண் புருவத்தை அடர்த்தியாக வளர வையுங்கள்.

1)வெங்காயம்

ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை கண் புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து வந்தால் அவை விரைவில் அடர்த்தியாக மாறும்.

2)கற்றாழை

ஒரு பிரஸ் கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து கண் புருவங்களின் மீது தடவி வந்தால் கண் புருவம் அடர்த்தியாக மாறும்.

3)விளக்கெண்ணெய்

இரவு தூங்கச் செல்வதற்கு முன் சில சொட்டு விளக்கெண்ணெய் எடுத்து கண் புருவங்களின் மீது தடவி வர மெல்லிய புருவம் கருமையவும்,அடர்த்தியாகவும் மாறும்.

4)வெங்காயச் சாறு + தேன்

ஒரு ஸ்பூன் வெங்காய சாறில் 3 துளி தேன் சேர்த்து புருவங்களின் மீது தடவி வந்தால் மெல்லிய புருவம் அடர்தியாகும்.

5)தேங்காய் எண்ணெய்

இரவு தூங்கச் செல்வதற்கு முன் சில சொட்டு தேங்காய் எண்ணெய் எடுத்து கண் புருவங்களின் மீது தடவி வர மெல்லிய புருவம் கருமையவும்,அடர்த்தியாகவும் மாறும்.

6)செம்பருத்தி பூ + ஆலிவ் ஆயில்

100 மில்லி ஆலிவ் ஆயிலில் 10 செம்பருத்தி இதழ்களை போட்டு காய்ச்சி ஆறவிட்டு புருவங்களுக்கு தடவி வந்தால் அவை அடர்த்தியாக காட்சியளிக்கும்.