சமைக்கும் பொழுது கருகிய பாத்திரங்களை கை வலிக்காமல் பளிச்சிட செய்யும் தந்திரம் இது தான்!!

0
172
Easy way to clean burnt pan while cooking
Easy way to clean burnt pan while cooking

சமைக்கும் பொழுது கருகிய பாத்திரங்களை கை வலிக்காமல் பளிச்சிட செய்யும் தந்திரம் இது தான்!!

இன்றைய நவீன உலகில் சமைப்பது என்பது பெண்களுக்கு சலிப்படைய செய்யும் ஒன்றாக உள்ளது.பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.காலையில் நேரமாக வேலைக்கு சென்று விட்டு மாலையில் நேரம் கழித்து வருவதால் சமைக்க நேரம் இல்லாமல் போய்விடுகிறது.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பெண்கள் சமைக்கின்றனர்.இப்படி சமைக்கும் பொழுது ஒரு சில நேரம் கவனக் குறைவு ஏற்படுகிறது.அதாவது பாத்திரங்கள் அடிபிடித்து விடுகிறது.

இதனால் கேஸ்,பாத்திரம் இரண்டுமே வீணாகும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.ஒரு சிலர் அடிபிடித்து கருகிய பாத்திரங்களை சுத்தம் செய்ய சலித்துக் கொண்டு அதை தூக்கி போட்டு விடுகின்றனர்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸ் கருகிய பாத்திரங்களை புதிது போன்று பளிச்சிட செய்ய உதவும்.

ஒரு எலுமிச்சம் பழத்தின் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் நீரை போட்டு கொதிக்க விடவும்.இந்த நீர் இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது கருகிய பாத்திரத்திற்குள் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பின்னர் பாத்திரம் துலக்கும் சோப் பயன்படுத்தி தேய்த்தால் கருகிய பாத்திரங்கள் பளிச்சிட செய்யும்.

அதேபோல் ஒரு ஸ்பூன் சோடா உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் கல் உப்பை கருகிய பாத்திரத்தில் போட்டு ஒரு கப் சூடான நீர் ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பின்னர் இதை துலக்கினால் புதிதான பாத்திரம் போல் பளிச்சிடும்.ஒரு சிலர் வினிகர் ஊற்றியும் கருகிய பாத்திரங்களை சுத்தம் செய்கின்றனர்.