தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு திருமணமா?

Photo of author

By Parthipan K

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு திருமணமா?

Parthipan K

கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டு வீரர்களுக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஒருமுறையாவது விளையாடும் ஆசை இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட்டிற்கு வந்த குறுகிய காலத்திலேயே இந்திய அணியில் இடம்பெற்றவர் விஜய் சங்கர் 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார்.  பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக  விளையாடவுள்ளார்.