வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

Photo of author

By Divya

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

கடன் இருந்தால் நிம்மதியான வாழ்வை கனவிலும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடும். கோடிக் கடன் இருந்தாலும் சரி சில்லறை கடன் இருந்தாலும் சரி அதை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாம் எடுக்கும் முயற்சியோடு ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் கடனை அடைக்க நல்ல வழி பிறக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிறு அன்று தான் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக் கிழமை செய்தால் கடன் அடைய வழி கிடைக்கும்.

கடன் அடைவதோடு பண வரவு அதிகரிக்கும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள் கருப்பு மிளகு. இது பண வரவை பல மடங்கு அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

ஞாயிறு இரவு எட்டு மணியிலிருந்து பதினோரு மணிக்குள் செய்ய வேண்டும். உங்கள் கையில் கருப்பு மிளகு நான்கு என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளவும்.

வீட்டு நிலைவாசலுக்கு வெளியில் வந்து உங்கள் கையில் வைத்திருக்கும் மிளகை இடதுபுறமாக தலையில் மூன்று முறை சுற்றவும். இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளவும். பிறகு இந்த மிளகை யார் காலும் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக் கிழமை செய்து வந்தால் வாங்கிய கடன் அனைத்தும் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.