மலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுகிறீர்களா!!! இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்க!!! மலச்சிக்கல் மாயமாகி விடும்!!!

Photo of author

By Sakthi

மலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுகிறீர்களா!!! இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்க!!! மலச்சிக்கல் மாயமாகி விடும்!!!

நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனையான மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூரியா சொல்வது போல மலச்சிக்கல் பிரச்சனை மனிதனுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த மலச்சிக்கல் பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுகின்றது. அதற்கு முக்கியமான காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை தான்.

மலச்சிக்கல் பிரச்சனையால் நமக்கு தோல் நோய்கள் உண்டாகும். இந்த மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பல உடல்நல ஆரோக்கிய குறைபாடுகளை மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுத்துகின்றது.

மலச்சிக்கல் என்பது நம் குடலில் மலம் இருகி வெளியேற முடியாமல் போவது தான்.ஆகும். இதுவே மிகப் பெரிய பிரச்சனை ஆகும். இந்த மிகப் பெரிய பிரச்சனையான மலச்சிக்கல் பிரச்சனை 5 வழிமுறைகளில் சரி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

மலச்சிக்கலை குணப்படுத்தும் 5 வழிமுறைகள்…

* மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டு வர வேண்டும். நார்ச்சத்துக்கள் அதிகம் அடங்கிய பழ வகைகளை சாப்பிடலாம். பேரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், உலர்ந்த அத்தி பழம், உலர்ந்த திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம். அதே போல நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

* இஞ்சி மலச்சிக்கலை குணப்படுத்தும் வல்லமை கொண்ட ஒரு மருந்துப் பொருளாகும். இஞ்சியை மலச்சிக்கல் பிரச்சனைக்கு மட்டுமில்லாமல் பலவிதமான நோய்களையும் தீர்க்க மருந்தாக பயன்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு இஞ்சியை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம்.

* சருமப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு தரும் காபியை நாம் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். காலை நேரங்களில் டீ குடிப்பதை விட காபி குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடைகின்றது.

* இஞ்சியைப் போலவே பல விதமான நோய்களை விரட்டும் வல்லமை கொண்டது எலுமிச்சம்பழம் ஆகும். இந்த எலுமிச்சம் பழத்தை தலை முதல் சருமம் வரை ஏற்படும் பலவித நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த எலுமிச்சம் பழத்தில் சாறு எடுத்து அதை தண்ணீரில் கலந்து காலையில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகி விடும்.

* மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் உடலில் நீரோட்டம் அதிக அளவில் இருக்க வேண்டும். நீரோட்டம் அதிகளவில் இருக்க வேண்டும் என்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் தண்ணீர் குடித்து உடலை நீரோட்டமாக வைத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடைகின்றது.