வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா!!! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!!!

0
39

வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா!!! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!!!

வயது ஆனாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எந்த வகையான உணவுகள் சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நாம் அனைவரும் நமது சருமத்தை பாதுகாக்க பல வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். குறிப்பாக வயதான தோற்றம் தெரியாமல் இருக்க நாம் அனைவரும் செயற்கையான வழிமுறைகளையே பயன்படுத்தி வருகிறோம்.

சருமத்தை பாதுகாக்க தற்போதைய காலத்தில் அனைவரும் மேக்கப் சாதனங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த மேக்கப் சாதனங்கள் சருமத்தை மெதுவாக பாதிக்கின்றது. நாளடைவில் இந்த மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தினால் தான் சருமம் அழகாக இருக்கும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த பதிவில் செயற்கை முறை இல்லாமல் இயற்கை முறையில் சருமத்தை பாதுகாத்து வயதான தோற்றத்தை மறைக்க என்ன செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

வயதான தோற்றத்தை மறைக்க இந்த 5 வகையான உணவுப் பொருள்கள் மிகுந்த பயன்தருகின்றது. அந்த ஐந்து வகையான உணவுப் பொருள்கள் வேறு எதுவும் இல்லை. எளிமையாக கிடைக்கக் கூடிய தக்காளி, தயிர், பப்பாளி, பச்சை இலை காய்கறிகள், மாதுளம்பழம் ஆகிய 5 பொருள்கள் ஆகும்.

* தக்காளியில் சருமத்தை பாதுகாக்கக் கூடிய சத்துக்கள் உள்ளது. தக்காளியில் அதிக அளவில் லைகோபீன் சத்துக்கள் உள்ளது. இந்த லைகோபீன் சத்துக்கள் சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக் கொள்ள உதவுகின்றது.

* நமது சருமத்தை பாதுகாப்பதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் தயிரை அதிகளவில் சாப்பிடும் பொழுது சருமம் பாதுகாக்கப்படுகின்றது. தயிரில் உள்ள ப்ரோபயாடிக்குகள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்கின்றது. அது மட்டுமில்லாமல் தயிரில் விட்டமின் பி12 சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதனால் தயிர் நமது சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

* மாதுளம் பழம் நமது சருமத்தை இருக்கமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதாவது மாதுளம் பழத்தில் கொலாஜன் என்ற சத்து உள்ளது. இந்த கொலாஜன் என்ற சத்து நமது சருமத்திற்கு கிடைத்து நமது சருமத்தை இறுக்கமாக வைக்கின்றது. இதன் மூலம் வயதானவர்களுக்கு ஏற்படும் தோல் சுருங்குதல், தோல் தொங்கி போதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

* பச்சை இலை உள்ள காய்கறிகளை சாப்பிடுவது நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. பச்சை இலை உள்ள காய்கறிகளை சாப்பிடும் பொழுது நமது சருமத்தில் கொலாஜன் சத்துக்கள் அதிகரித்து சருமம் இறுக்கமாக மாறுகின்றது.

* பப்பாளி பழம் சருமத்திற்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடிய பல வகைகளில் ஒன்று. பப்பாளி பழத்தில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளது. இந்த வைட்டமின் ஏ சத்துக்கள் நமது சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.