உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையா? இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் முடி கொட்டாமல் அடர்த்தியாக பட்டு போல் வளரும்!

0
320

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையா? இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் முடி கொட்டாமல் அடர்த்தியாக பட்டு போல் வளரும்! 

இன்று இருக்கும் இள வயது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கக்கூடிய தலையாய பிரச்சினைகள் ஒன்று முடி கொட்டுதல். இதனை எளிய இயற்கையான வீட்டில் தயார் செய்யப்படும் ஹேர் பேக் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலையில் கண்ட கண்ட ஷாம்புகளை பயன்படுத்துவதாலும், நிறைய ஜங்க் ஃபுட் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும், சில மரபணு மாற்றங்களாலும், தலைமுடி உதிர்தல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் சிலருக்கு உடலில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து குறைதல் போன்ற காரணங்களாலும் முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படும்.

சிலருக்கு பருவகால மாற்றங்களாலும் சுற்றுச்சூழலில் அதிக மாசுக்களினாலும் கூட முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படக்கூடும். தினமும் 100 முடிகள் கொட்டுவது என்பது சாதாரணமானது. ஆனால் அதற்கு மேல் கொட்டினால் உடனடியாக ஏதேனும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிறது. சரியான முறையில் சத்தான உணவு பழக்கத்தை கடைபிடிப்பதோடு இயற்கையான முறையில் தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய ஹேர் பேக்கை பயன்படுத்தி தலையை அலசுவதும் மிகவும் அவசியம். முடி கொட்டாமல் அடர்த்தியாக நன்றாக பளபளவென இருக்க  விருப்பப்பட்டால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.

1. முதலில்  முடிக்கு தேவையான அளவு பச்சை பயறு ஒரு அரை  கப் அளவு எடுத்துக் கொள்ளவும். முடிக்கு தேவையான நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தலைமுடியை பட்டு போல் மிருதுவாக மாற்றுகிறது.

2. அடுத்து இதில் 2  ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்கவும்.

3. அடுத்ததாக இதில் 5 மிளகு சேர்க்கவும். மிளகு தலைமுடிக்கு நல்லதொரு ரத்த ஓட்டத்தை அளிக்கும். முடி உதிர்வை தடுக்கும்.

4. அடுத்து இதில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உப்பு கலக்காமல் சேர்க்கவும். இரவு முழுவதும்  எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதில் காலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகி இருக்கும். முடியின் வேர்க்கால்களை வலுவாக்கி முடிக்கு நல்லதொரு வலுவை கொடுக்கும்.

5.  இறுதியாக இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

தலைமுடியில் சிறிது எண்ணெய் வைத்து மசாஜ் செய்து விட்டு பிறகு தயார் செய்த ஹேர் பேக்கை முடியும் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற விட்டு பின் வெறும் தலைக்கு சீயக்காய் ஷாம்பு எதுவும் போடாமல் குளிக்கவும். இப்போது உங்கள் முடி அழகாக பட்டுப்போல் மாறி இருப்பதை காணலாம்.

Previous articleஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்!
Next articleகாலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்!