மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா?? இதை குடித்தால் சரியாகிவிடும்!!
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குணப்படுத்தி கருப்பையை பலப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பை பற்றி பார்க்கலாம். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உடல்ச்சோர்வு, அசதி, வயிற்று வலி, இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம், அதிக கோபம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். மாதவிடாய் காலங்களில் உடலிலிருந்து கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் வெளியேறுவதால் பெண்கள் அதை ஈடு கட்டும் அளவிற்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பால், பேரிச்சை, முட்டை, உலர் திராட்சை, மாதுளை, பப்பாளி, அத்திப்பழம், தேங்காய், வாழைப்பூ, கீரைகள், தானியங்கள், பருப்பு வகைகள், வேர்க்கடலை, இயல் உளுந்து பாதம், போன்ற கால்சியம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது முக்கியம்.
இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பை பலமடைவதுடன் பிற்காலத்தில் எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம், மூட்டு வலி, கருப்பை பலவீனம், போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைப்பதற்கு அலோபதி மருந்து மாத்திரைகள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட இயற்கையான முறையில் சரி செய்ய முயற்சிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
அந்த வகையில் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தி கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் சிறந்த மருத்துவத்தை பற்றி அடுத்து பார்க்கலாம். கருப்பை பலவீனத்திற்கும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைப்பதற்கும் நமது வீட்டு சமையல் அறையில் இருக்கும் கிராம்பு சிறந்த உணவு பொருளாகவும் மருந்தாகவும் விளங்குகிறது.
கிராம்பு உடலில் உள்ள வலி வீக்கங்களை குறைக்கும் வேதிப்பொருட்களும் மருத்துவ பண்புகளும் அதிக அளவில் நிறைந்துள்ளன இது சிறந்த வலி நிவாரணியாகவும் இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் பண்புகள் கருப்பை நோய், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புகள், செரிமான கோளாறு போன்றவற்றை குறைக்கும் தன்மையும் கொண்டது.
செய்முறை:
கிராம்பை பொடி செய்து கொண்டு அதில் கால் தேக்கரண்டி அளவு எடுத்து சுத்தமான தேனில் குழைத்து மாதவிடாய் காலங்களில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். சிறிது நேரம் கழித்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். அல்சர் நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் உணவிற்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு இந்த கிராம்பு பொடியை எடுத்துக் கொள்வதால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, உடல் அசதி போன்றவற்றை குணப்படுத்த உதவும். கருப்பை ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
பொதுவாகவே கிராம்பு பொடியை வாரத்திற்கு ஓரிருமுறை தேனில் குழைத்தோ அல்லது கஷாயமாகவோ எடுத்துக்கொண்டு வந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கச் செய்யும்.