உங்கள் வீட்டில் நீங்கள் தான் முதல் பட்டதாரியா!! உங்களுக்கானது தான் இந்த தகவல்!!

0
45

உங்கள் வீட்டில் நீங்கள் தான் முதல் பட்டதாரியா!! உங்களுக்கானது தான் இந்த தகவல்!!

எந்த ஒரு தேர்வும் எழுதாமல் பணம் எதுவும் செலவு செய்யாமல் வெறும் 60 ரூபாயில் அரசு வேலை வாங்க முடியும். ஆனால் அது உங்களது வீட்டில் இருப்பவர்களை பொருத்தும் அவர்கள் படித்திருக்க கூடிய படிப்பை பொருத்தும் இருக்கிறது.

அதாவது உங்களது வீட்டில் நீங்கள் தான் முதல் பட்டதாரி என்றால் அந்த முதல் பட்டதாரி சான்றிதழை வைத்து உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்கும். இந்த சான்றிதழை அறுபது ரூபாயில் வாங்கி விடலாம்.

எனவே இன்று இந்த சான்றிதழை வைத்து அரசு வேலையில் நமக்கு முன்னுரிமை கிடைத்து ஈசியாக அரசு வேலை வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அந்த முதல் பட்டதாரி சான்றிதழ் யாரெல்லாம் வாங்க முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

1. அதாவது ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் படித்து வருகின்றன என்றால் அதில் முதல் நபர் கட்டண சலுகையோடு பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்னும் பட்சத்தில் இரண்டாவது பிள்ளை கட்டண சலுகை இல்லாமல் படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்களே முதல் பட்டதாரிக்கு உரியவர் ஆவர்.

2. இரண்டு பிள்ளைகளில் யார் முதலில் பட்டம் பெறுகிறார்களோ அவர்களே முதல் பட்டதாரி உரிமைக்கு உரியவர் ஆவார். எனவே இரண்டு பிள்ளைகளில் யார் முதலில் கல்லூரியில் செல்கிறார்கள் என்பது கிடையாது யார் முதலில் பட்டம் வாங்குகிறார்களோ அவர்களே முதல் பட்டதாரிக்கு உரியவர் ஆவார்.

3. ஒரு குடும்பத்தில் முதல் பிள்ளை ஐந்து ஆண்டுகால படிப்பை படித்து வருகிறார் மற்றும் இரண்டாவது பிள்ளை மூன்று ஆண்டுகால படிப்பை படித்து வருகிறார் என்றால் இரண்டாவது பிள்ளையே முதலில் பட்டம் வாங்குவார் எனவே அவரே முதல் பட்டதாரிக்கு உரியவர் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இருவருமே ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தால் யார் முதலில் அந்த பட்டத்தை பெறுகிறார்களோ அதாவது மாதத்தை கணக்கில் கொண்டு முதல் பட்டதாரி உரிமையை வழங்க வேண்டும். மேலும் இருவருமே ஒரே ஆண்டு ஒரே மாதத்தில் பட்டம் வாங்குகிறார்கள் என்றால் முதல் பிள்ளைக்கு முதல் பட்டதாரி உரிமையை அளிக்க வேண்டும்.

4. முதல் பிள்ளை பட்டம் வாங்கிய பிறகு ஏதேனும் ஒரு காரணத்தால் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் இரண்டாம் பிள்ளைக்கு இந்த முதல் பட்டதாரி உரிமை அளிக்கப்படும்.

5. கூட்டுக் குடும்பமாக வாழும் குடும்பங்களில் யார் முதலில் பட்டம் பெறுகிறார்களோ அவர்களுக்கே முதல் பட்டதாரி உரிமை அளிக்கப்படும்.

6. மிகவும் நாட்கள் கழித்து படித்திருந்தாலுமே இந்த முதல் பட்டதாரி உரிமையை வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

7. இந்த முதல் பட்டதாரி சான்றிதழை வாங்குவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் படித்து முடித்து பல வருடங்கள் கழித்தும் இந்த டிகிரி சான்றிதழை நிச்சயமாக பெற்றுக் கொள்ளலாம்.

8. இந்த முதல் பட்டதாரி சான்றிதழை பெறுவதற்கு ஆண்டும் ஒரு தடை கிடையாது எந்த ஆண்டில் நீங்கள் பட்டப்படிப்பு முடித்து இருந்தாலும் இப்பொழுது முதல் பட்டதாரி உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.

9. இரட்டை குழந்தைகளாக பிறந்துள்ளவர்கள் இரண்டு பேருமே முதல் பட்டதாரி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இந்த முதல் பட்டதாரி சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பதை காண்போம். இதை இ-சேவை மையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான ஆவணங்களான புகைப்படம், முகவரிக்கான மாற்று சான்றுகள், மனுதாரரின் மாற்றுச் சான்றிதழ் அல்லது வேலை வாய்ப்பு அட்டை, மனுதாரரின் பெற்றோர் மற்றும் உறுதிமொழி படிவம், பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, மனுதாரரின் கல்வி சான்றிதழ்கள் முதலியவை தேவை.

author avatar
CineDesk