ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் 20 ரூபாய் இருந்தால் போதும்!!

0
51

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் 20 ரூபாய் இருந்தால் போதும்!!

இந்திய குடிமகனாக இருப்பதில் முக்கிய ஒரு அடையாள அட்டையாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு வைத்து பிறகு மத்திய அரசு மாநில அரசு கொடுக்கின்ற சலுகை கிடைக்கும் மேலும் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் கடைகளில் பல பொருள்களை வாங்க முடியும்.

மேலும் ரேஷன் கார்டுகளை வைத்திருந்தால் தான் அரசாங்கம் தரக்கூடிய சலுகைகளை நம்மால் பெற முடியும்.

அதனைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள ரேஷன் கார்டு தொலைந்து விட்டது அல்லது புதிய பெயர் மாற்றம் செய்த ரேஷன் கார்டு எளிய முறையில் வாங்கிக் கொள்ளலாம்.

அதனை வாங்குவதற்கு tnpds.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று நகல் மின்னணு குடும்ப அட்டை என்ற வார்த்தையை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் அடுத்த பக்கத்திற்கு செல்லும் அதில் நீங்கள் ரேஷன் கார்டு வாங்கும் போது கொடுத்த மொபைல் எண்ணை கொடுத்து அதன்பின் வரும் otp வரும் பதிவு செய் என்பதை கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து அது அடுத்த கட்டத்திற்கு செல்லும் அதில் உங்களுடைய ரேஷன் கார்டு அட்டையின் முழு விவரங்கள் கொடுத்திருக்கும் அதனை ஒரு முறை கவனமாக பார்த்து சரி செய்துவிட்டு சரியாக கவனமாக பார்த்து சரியாக உள்ளதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அதற்கு கீழே நீங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க கூடிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் அதில் உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டது என்றால் தொலைந்து விட்டது என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்றால் பெயர் மாற்றம் செய்தல் என்றும் கொடுக்க வேண்டும். ஆக முடித்து விட்டோம் என்றால் உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் நம்பர் வரும் அதனை பயன்படுத்தி உங்கள் ரேஷன் கார்டு நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

அதனை நீங்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்று இருவது ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு நான்கு நாட்களில் நீங்கள் ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ள முடியும்.

author avatar
Jeevitha