எந்த நேரமும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்போ இந்த இலையில் டீ போட்டு குடிங்கள்!!

Photo of author

By Divya

எந்த நேரமும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்போ இந்த இலையில் டீ போட்டு குடிங்கள்!!

ஒரு சிலருக்கு காரணம் இன்றி உடல் சோர்வாக இருக்கும்.சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,வேலைப்பளு போன்ற காரணங்களால் உடல் சோர்வு ஏற்படும்.

இவ்வாறு உடல் சோர்வால் அவதிப்படும் நபர்கள் புதினா இலையில் டீ போட்டு குடித்தால் உடல் புத்துணர்வு பெறும்.இழந்த சுறுசுறுப்பு மீண்டும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா
2)டீ தூள்
3)வெள்ளை சர்க்கரை
4)பால்
5)ஏலக்காய்
6)பட்டை
7)மஞ்சள் தூள்

செய்முறை:-

முதலில் 5 புதினா இலையை நீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் உரலில் ஒரு ஏலக்காய் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் காய்ச்சாத பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் 1 தேக்கரண்டி டீ தூள் சேர்க்கவும்.

பாலில் டீ தூள் கலந்து நிறம் மாறியதும் புதினா இலை,இடித்த ஏலக்காய் மற்றும் 1 துண்டு பட்டை போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

அதன் பிறகு தேவையான அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.பாலில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்கு கொதித்து வந்ததும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சில வினாடி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த டீயை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் உடல் சோர்வு,மனச் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும்.