உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று வருந்துபவரா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று வருந்துபவரா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

நம் வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி கட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு வீடுகள் வாஸ்து முறைப்படி அமைவதில்லை.

வாஸ்து குறைபாடு இருக்கும் வீட்டில் குடும்ப பிரச்சனை, வறுமை, குழப்பம் போன்றவை தலைவிரித்து ஆடத் தொடங்கி விடும். அதேபோல் நாம் விலைக்கு வாங்கும் வீடுகளும் வாஸ்து முறைப்படி கட்டப்படுவதில்லை. இப்படி வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த வாஸ்து குறைபாடு நீங்கி நல்லது நடக்க சில பரிகாரங்களை செய்வது நல்லது.

உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்க எளிய பரிகாரம்…

வீட்டில் அலுவலகத்தில் / கடையில் / வியாபார ஸ்தலத்தில் இப்படி எங்கு வாஸ்து குறைபாடு இருந்தாலும் அந்த தோஷத்தைப் போக்க இதை விட எளிய பரிகாரம் எதுவும் இல்லை.

இந்துப்பு விளக்கு அதாவது ராக் சால்ட் லேம்ப்- இது பரிகாரப் பொருட்கள் கிடைக்கும் கடைகளிலும் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் தாராளமாகக் கிடைக்கிறது. அதுவும் நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் கிடைக்கிறது.

இதை உங்கள் வீட்டில் எந்த மூலையில் வாஸ்து குறைபாடு உள்ளதோ அதன் அருகில் வைத்து விடுங்கள். நேர்மறை ஆற்றலை அதிகம் பரவச் செய்யும் சக்தி இதற்கு உண்டு.

இதற்கு சூடு சற்று அவசியம். அதனால் தான் லாம்ப்போடு வாங்குவது நல்லது. அப்படி இல்லையென்றால் தனியாக வாங்கி அதன் முன் ஒரு சிறிய அகல் ஏற்றி வைக்கவும்.

நோயாளிகளின் அருகில் இதை வைத்தால் இதனுடைய ஆற்றல் அவர்கள் சுவாசத்தின் மூலமாக உடலுக்குள் சென்று அவர்களுடைய உள் உறுப்புகளை சீராக இயங்க வைக்கும் சக்தி இதற்கு உண்டு. பெட் சோர் என்பதில் புண்ணை ஆற்றக் கூடிய வல்லமை உண்டு.