உங்கள் காதுகளில் இருந்து சீழ் வடிகின்றதா!!? இதை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகள் போதும்!!!

0
92
#image_title

உங்கள் காதுகளில் இருந்து சீழ் வடிகின்றதா!!? இதை சரிசெய்ய இந்த இரண்டு மூலிகைகள் போதும்!!!

நம்மில் சிலருக்கு காதுகளில் இருந்து சீழ் வடியும். இந்த சீழ் வடிவதை நிறுத்துவதற்கு இரண்டு மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

நம்முடைய காதுகளில் இருந்து வடியும் சீழானது நமக்கு சில சமயங்களில் காது தொடர்பான தொற்றுகளை ஏற்படுத்த காரணமாக அமைகின்றது. நம் காதுகளில் ஏற்படுகின்ற வீக்கம் காரணமாக காதில் இருந்து சீழ் வடிகின்றது. மேலும் நடுக்காதில் தொற்று எதாவது இருந்தாலும் காதில் இருந்து சீழ் வடியும்.

மேலும் நமது காதில் புண்கள் இருந்தாலும் சீழ் வடியும். காதில் இருந்து சீழ் வடிவது நாளடைவில் சரியாகி விடும் என்று. அப்படியே விட்டுவிட கூடாது. அப்படியே விட்டுவிட்டால் பெரிய பிரச்சனை ஏற்படும்.

காதில் இருந்து சீழ் வடிவதை தடுக்க முன்றோர்கள் கூறி வைத்த வைத்தியம் உள்ளது. காதில் இருந்து சீழ் வடிதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் இதை கை வைத்தியம் வைத்து குணப்படுத்தலாம். இதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

சீழ் வடிவை தடுக்க உதவும் மருந்து தயாரிக்க தேவையான பொருள்கள்…

* துளசி
* கரிசலாங்கண்ணி கீரை

செய்முறை…

துளசி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் அதே போல கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நமக்கு எப்போது எல்லாம் காது வலி ஏற்படுகின்றதோ அப்போது எல்லாம் இந்த மருந்தை காதில் இரண்டு சீட்டுகள் விட்டால் போதம். இதனால் காதில் ஏற்படுகின்ற புண்கள் ஆறும். மேலும் காதில் இருந்து சீழ் வருவது நிறுத்தப்படும்.

இதை பயன்படுத்திய பிறகும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேல் காதில் இருந்து சீழ் வந்தால் உடனே தாமதிக்காமல் ENT மருத்துவரை அதாவது காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுக வேண்டும்.

Previous articleஅடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!
Next articleவீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க?