கால் பாதங்கள் அடிக்கடி வீங்கி விடுகிறதா? இதை குணமாக்க உதவும் சிம்பிள் டெக்னிக்ஸ்!!

Photo of author

By Divya

கால் பாதங்கள் அடிக்கடி வீங்கி விடுகிறதா? இதை குணமாக்க உதவும் சிம்பிள் டெக்னிக்ஸ்!!

இன்று ஆண்,பெண் அனைவரும் ஒரு வயதை கடந்து விட்டால் கால் வலி,பாத எரிச்சல்,மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கி விடுகின்றனர்.

ஒரு சிலருக்கு அதிக தூரம் நடப்பது,ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பது,உடல் பருமன்,வயது முதுமை போன்ற காரணங்களால் பாதங்கள் வீங்குகிறது.அது மட்டுமின்றி பாதங்களில் அடிபட்டாலும் உடனே வீங்கி அதிக வலியை உண்டாக்கும்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த பாத வீக்க பிரச்சனையை சந்திப்பார்கள்.பாதங்கள் மிகவும் முக்கிய உறுப்பு என்பதினால் அதை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது அவசியம்.

பாதங்களை அடிக்கடி வெந்நீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.முடியாதவர்கள் இரவு நேரத்தில் மட்டுமாவது செய்து வாருங்கள்.கால் வீக்கத்தை குறைக்க சோடா உப்பு பெரிதும் உதவும்.

சூடு பொறுக்கும் அளவு நீர் எடுத்து அதனுள் 2 தேக்கரண்டி சோடா உப்பு போட்டு கலந்து பாதங்களை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.பின்னர் காட்டன் துணியில் பாதங்களை துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் பாத வீக்கத்தை குறைக்க முடியும்.

கல் உப்பு பாத வீக்கத்தை குறைக்க கூடிய ஒரு பொருள்.ஒரு கப் அளவு நீரில் 2 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து காட்டன் துணியில் நினைத்து பாதங்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்.

எலுமிச்சம் பழ தோலை கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி வருவதன் மூலம் வீக்கம்,எரிச்சல் குணமாகும்.

இரவு நேரத்தில் பாதங்களுக்கு இதமான அழுத்தம் கொடுத்து விட்டு உறங்கி வந்தால் வலி,வீக்கம்,எரிச்சல் அனைத்தும் சரியாகும்.