கை கால்களில் அதிகளவு வியர்வை நீர் வெளியேறுகிறதா? இதை கட்டுப்படுத்த பிளாக் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

கை கால்களில் அதிகளவு வியர்வை நீர் வெளியேறுகிறதா? இதை கட்டுப்படுத்த பிளாக் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களில் பலருக்கு அடிக்கடி கை,கால்களில் வியர்வை வெளியேறும்.நடக்கும் பொழுது கால்களின் வியர்வை ஈரம் தரையில் படிவத்தை பார்த்திருப்பீர்கள்.கைகளில் அதிகளவு வியர்க்கும் பொழுது அவை ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும்.இதற்கு முக்கிய காரணம் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற நோய்.

பயம்,பதட்டம் ஏற்படும் பொழுது கை,கால்களில் அதிகளவு வியர்கத் தொடங்கும்.இவ்வாறு கை,கால்களில் அதிகளவு வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

ஒரு கப் அளவு சக்கரை சேர்க்காத பிளாக் டீயை கொண்டு கை,கால்களை சுத்தம் செய்தால் வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்தலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 சூடத்தை தூள் செய்து கலந்து விடவும்.பிறகு அதில் கால்களை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்தால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.

அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் ஊற்றி கை,கால்களை சுத்தம் செய்து வந்தால் உள்ளங்கை வேர்த்தல்,கால்களில் வியர்த்தல் பிரச்சனை சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கை,கால்களை சுத்தம் செய்து வந்தால் வியர்வை பிரச்சனை சரியாகும்.