குடிபோதையில் மனைவியுடன் தகராறு!  கோடாரியால் வெட்டு! மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்! 

Photo of author

By Amutha

குடிபோதையில் மனைவியுடன் தகராறு!  கோடாரியால் வெட்டு! மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்! 

குடிபோதையில் குடும்பத்தில் தகராறு செய்து 3 வயது மகனை கோடரியால் வெட்டி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தந்தையே பெற்ற மகனை கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம் ஹூசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிட்டிசாப்பூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சந்திரகிஷோர் லோதி. இவரது மூன்று வயது மகன் ராஜ்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் மகனுடன் தகராறில் லோதி ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் செய்த செயல் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

ஆத்திரத்தில் கண்மண் தெரியாமல் தனது பெற்ற மகன் என்று கூட பாராமல் ராஜை கோடாரியால் வெட்டி துடிதுடிக்க  பலமுறை வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானான்.

பின்னர் இறந்த சிறுவனின் உடலை சந்திர கிஷோர் விவசாய வயலில் புதைத்துள்ளார். இதுகுறித்து இவரது மனைவி காவல் நிலையத்தில் தனது கணவரின் மீது மகனை கொன்றதாக புகார் தெரிவித்தார்.

அவரது புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் சந்திர கிஷோரை கைது செய்தனர். மேலும் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.