Skip to content
  • Home
  • About Us
  • State
  • National
  • Cinema
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Contact Us
  • Disclaimer
News4 Tamil | Latest Online Tamil News | Entertainment | Employment | Business | Sports
Scholarship for school students This applies only to those who benefit from this scheme

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை! இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்!

January 27, 2023 by Madhumitha
Follow us on Google News

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை! இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்!

மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கபடுகிறது.அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நடப்பாண்டில் எண் எம் எம் எஸ் தேர்வானது வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதியே தொடங்கியது.இந்நிலையில் இந்த மாதம் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் நடப்பாண்டில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிதாகவும்,முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று தற்போது பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை புதுபித்து கொள்ளலாம்.

மேலும் தற்போது மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் உதவித்தொகை வங்கி கணக்கில் சென்றடைய ஏதுவாக இருக்க ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்கள் ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Channel
Categories Breaking News, Education, State Tags 10th Class, Aadhaar Number, Bank Account, central govt, February 25, No. MMS Exam, Scholarships, School students, ஆதார் எண், உதவித்தொகை, எண் எம் எம் எஸ் தேர்வு, பத்தாம் வகுப்பு, பள்ளி மாணவர்கள், பிப்ரவரி மாதம் 25, மத்திய அரசு, வங்கி கணக்கு
குடிபோதையில் மனைவியுடன் தகராறு!  கோடாரியால் வெட்டு! மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்! 
நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி
© 2023 News4 Tamil | Latest Online Tamil News | Entertainment | Employment | Business | Sports • Built with GeneratePress