மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் என்ற இடத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி. அவருக்கு வயது 58 ஆகும். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலாளராக செயலாளராக இவர் பணிபுரிந்து வந்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட இன்று அதிகாலையில் அறிவுடைநம்பி சென்று இருக்கின்றார். அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை வெகுநேரமாக தேடி இருக்கின்றனர்.
இந்த தகவலை கேட்டவுடன் அலுவலக ஊழியர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தேடியபோது, வாயில் துணியை வைத்து அடைத்தபடி எரிந்த நிலையில் சடலமாக அவர் கிடந்திருக்கிறார். அறிவுடைநம்பி அவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்த அனைவரும் மிக அதிர்ச்சி ஆகிவிட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த ராஜ், செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறிவுடை நம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் போலீசார் ஆய்வு செய்த போது, கையில் பெட்ரோலுடன் அறிவுடைநம்பி சென்றது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அது தற்கொலையா? என்று மிகத் தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குடும்பத்தினர், அலுவலக ஊழியர்கள் என பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிவுடைநம்பி பெட்ரோல் கேனுடன் சென்ற காரணத்தினால் இது கொலையா?, தற்கொலையா? என்று கண்டுபிடிப்பதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இறுதிகட்ட விசாரணையின்போது இவை அனைத்தும் ஒரு தீர்வுக்கு வரும் என்று போலீசார் எண்ணுகின்றனர். விசாரணை முடிந்த பின் பிரேத பரிசோதனையின் ரிசல்ட் வந்தவுடனே தான் இதற்கான தீர்வு கிடைக்கும் என போலீசார் கூறுகின்றனர்.