நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

Photo of author

By Vinoth

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக விலங்கும் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அர்ஜுன். அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளின் தனித்துவம் காரணமாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என அழைக்கப்பட்டு வருகிறார். ஜெண்டில்மேன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

இந்நிலையில் இன்று அவரின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்தார். கர்நாடகாவில் ஆசிரியையாக பல ஆண்டுகாலம் பணியாற்றியவர் தேவம்மா. அவருக்கு அர்ஜுன் உள்பட மூன்று பிள்ளைகள்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் மறைந்த தேவம்மாவுக்கு அஞ்சலியை வெளிப்படுத்தி வருகின்றனர்.