“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி!

0
105

“ஒரு கிலோ ஆப்பிள் 2000 ரூபாயா?… “ அதிர்ச்சியூட்டும் இலங்கை விலைவாசி!

இலங்கையில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். இதனால் அங்கு போர்க்களம் போல காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார்.

ஆனால் அவர் அதிபராவதற்கும் எதிர்ப்பு நிலவுகிறது. ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்து வந்தால் சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வரை இலங்கையின் விலைவாசி மக்களால் பொருட்களை வாங்க முடியாத அளவில் உள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கிலோ 2050 ரூபாய் வரை விற்கப்படுவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் மற்றும் அரிசி போன்ற பொருட்கள் கையிருப்பில் இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் அந்த நாட்டின் ரூபாய் மதிப்பும் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.