இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில்  நேர்ந்த சோகம்!

Photo of author

By Amutha

இராணுவ வீரர் அடித்துக் கொலை! ஆபாச வீடியோ குறித்த பிரச்சனையில்  நேர்ந்த சோகம்!

ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக் கேட்ட இராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

குஜராத்தில் மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுப் பற்றிய செய்தி குறிப்பு வருமாறு,

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கடந்த சனிக்கிழமை சிறுமி ஒருவரின் ஆபாச வீடியோவை சக்லசி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் வெளியிட்டதாக தெரிகின்றது. மேலும் வீடியோவில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியும், வீடியோ வெளியிட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வருவதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இராணுவ வீரரான அந்த சிறுமியின் தந்தை, தன் மகள் தொடர்பான ஆபாச வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று இரவே தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் நேராக அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டனர்.

அப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த குடும்பத்தினர் தாக்கியதில் அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இதனை பாதுகாப்பு படை வட்டாரங்கள் உறுதிபடுத்திய நிலையில் அதை தொடர்ந்து விசாரித்து வழக்குபதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து உள்ளனர்.

இந்த கொலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்களும் உள்ள நிலையில் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.