அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

0
135

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது?முழுவிபரம்!

கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மற்றும் AICTE, மற்றும் UGC-யின் வழிகாட்டுதலின்படி,
இறுதியாண்டு அல்லாது தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு,பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து
தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோரும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதுமட்டுமின்றி,
AICTE தமிழ்நாடு அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக,அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டது.இதற்கு பதிலடியாக AICTE அமைப்பானது இதுபோன்ற எந்தவிதமான கடிதத்தையும் அனுப்பவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தை ஏஐசிடிஇ-யின் கருத்தாக கூறி வருகின்றது என்றும்,தமிழக அரசு அறிவித்த அறிவிப்பில் உறுதியாக உள்ளோம் என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்.இதுபோன்ற பல செய்திகள் ஊடகங்களில் உலாவந்து கொண்டிருக்கிறதே தவிர,அரியர்ஸ் ரத்து என்ற அறிவிப்பிற்கு,சரியான முடிவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளும் ஒன்றாக எடுத்துக்கொண்டு கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி,உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

தமிழக அரசு சார்பில் அளித்த விளக்கம்

பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் மாணவர்களின் அரியர் அனைத்தும் ஆல்பாஸ் செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்ததாகவும்,மேலும் UGC அமைப்பானது இறுதி பருவத்தேர்வை தான் ரத்து செய்யக்கூடாது என்று கூறி உள்ளது என்றும்,தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அளித்த விளக்கத்தின்படி: அனைத்துப் பாடங்களிலும் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களை அரசின் இந்த அறிவிப்பு சோர்வடைய செய்துள்ளதாகவும்,மேலும் இந்த அறிவிப்பானது கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் தரத்தை தாழ்த்தும் வகையிலும் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து மேலும் கூறியதவாறு, மாணவர்கள் தேர்வில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும்,கிடைக்கும் என்றும்,தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரியும் விவாதம் தொடர்ந்தது.

நீதிமன்ற தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம்,இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு,ஏஐசிடிஇ,யூஜிசி ஆகியவை வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தேர்ச்சி விவகாரம் மற்றும் தமிழக அரசு அளித்த பதில்!

இதை தொடர்ந்து நேற்று இந்த விவகாரம் குறித்து,AICTE – யின் தலைவர்,தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில்,AICTE – யின் தலைவர்,பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாணவர்கள் நலன் கருதி,அரியர் தேர்வு ரத்து என்று கூறியதெல்லாம் சரி.ஆனால் தற்போது நீங்கள் தேர்வு நடத்த தயாராக உள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியது.இதற்கு நாங்கள் தேர்வு நடத்த தயாராக உள்ளோம் என்று உயர்கல்வித்துறை செயலாளரால் கூறப்பட்டது.
இந்த பதிலைக் கேட்ட AICTE அப்போது பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.இதனால் தமிழக அரசு,அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று வழங்கிய அறிவிப்பை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதுமட்டுமின்றி மாணவர்களும் தங்களது அரியர் தேர்வுகளுக்கு தயார் படுத்திக்கொள்ளும்மாறும் தகவல்கள் கூறப்படுகிறது.இதனால் அரியர் ரத்து என்ற செய்தியை கேட்டு கொண்டாட்டத்தில் இருந்த அரியர் மாணவர்கள் தற்போது சிறிது கலக்கத்தில் உள்ளனர்.

Previous articleசமையலறையின் ஜன்னல் எந்த திசையில் இருக்க வேண்டும்!!
Next articleஇந்த பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா