சமையலறையின் ஜன்னல் எந்த திசையில் இருக்க வேண்டும்!!

0
86

பண்டைக்காலத்து வீடுகளில் சரியான இடத்தில் கட்டியிருக்கும் சமயலறையை காணலாம். சமையற் கட்டில் கிழக்கு திசையில் திறக்கும் ஜன்னலையும் காணலாம்.

புதிதாக வீடு கட்டுபவர்களிடம் முன்னோர்கள், சமையலறையில் கிழக்கு நோக்கி திறக்கும் ஜன்னல் அமைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

சமையலறையில் சமையல் நடக்கும் போது புகை எழும்புகிறது. இந்த புகையை வெளியேற்றுவதற்கே இப்படி ஒரு ஜன்னல் அமைக்க வேண்டிய அவசியம் என்று பலரும் நினைத்துள்ளனர்.

ஆனால், உண்மை அது அல்ல. ஒரு வீட்டில் தினசரி முதலாவதாக செயல்படத் தொடங்குவது சமையலறையே. அதனால் வைட்டமின்கள் அடங்கிய காலை வெயில் சமையற் கட்டில் புக வேண்டும் என்பதை பண்டைய மக்கள் புரிந்து கொண்டிருந்தனர். மேலும், தென் மேற்கில் இருந்து வரும் காற்று சமையலறையில் உள்ள வாயுவையும் புகையையும் கிழக்கே திறந்து இருக்கும் ஜன்னல் வழியாக கொண்டுசெல்லும். இதனால்தான் சமையலறைக்கு கிழக்கு திசையில் திறக்கும் ஜன்னல்கள் அமைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர்.