களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெருமாள் கோவிலின் மாட்டுச்சந்தை புகழ் பெற்ற மாட்டுச்சந்தையாக சிறந்து விளங்கியுள்ளது. நாளை மறுநாள் பத்தாம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாட்டு சந்தைகளில் மாடுகள் விற்க கோலாகலமாக விற்பனையாகி வருகின்றது. மாட்டு சந்தைக்கு தமிழக முழுக்க இருந்து கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வெட்டு மாடுகள், காளை மாடுகள்,கறவை மாடுகள்,நாட்டு மாடுகள்,எருமை மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் என சுமார் 3500 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
இவ்வகை மாடுகளை வாங்குவதற்காக கேரளா வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர். பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் மக்களுக்கு விருந்து வைப்பது பழங்கால பழக்கமாகிறது. இதற்காக பலவகையான இறைச்சி மாடுகளை அதிகமாக வாங்கி செல்கின்றனர். இதைத்தொடர்ந்து கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வெட்டு மாடுகளை வாங்கி அதனை உடனடியாக லாரியில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர்.
பால் மாடுகள் ,வளர்ப்பு மாடுகள் , வளர்ப்பு இளம் கன்றுகள் மற்றும் காளை கன்றுகள் ஆகியவற்றை விரும்பி வாங்கிச் சென்றனர். சந்தைகளில் ஒரு வாரத்தில் சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பக்ரீத் பண்டிகையொட்டி ஏழு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.