கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?

0
218
#image_title

கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?

ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி சிறந்த இதழியலாளருக்கு வழங்கி கௌரவ படுத்துவது வழக்கம். இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் ஓர் சான்றிதழையும் கொண்டதாகும். இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான இவ்விருதை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெற துவங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுதுகோல் விருது பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வரைமுறைகள் குறித்த விவரம்

விருது பெற விண்ணப்பிக்கும் நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பத்திரிகையாளராக முழுநேரம் பணியாற்றி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபரது எழுத்துக்கள் மக்கள் மனதில் ஆழ பதிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் நேரடியாகவோ, தான் பணிபுரியும் பத்திரிகை அலுவலக பரிந்துரை பேரிலோ அல்லது வேறு ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையிலோ விண்ணப்பிக்கலாம்.
தமிழ் இதழியல் துறையில் தொடர்ந்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும்.
தனது துறையில் பெண்கள் முன்னேற்றம், சமூக மேம்பாடு, அழிவுநிலையில் உள்ள மக்களின் மேம்பாடு உள்ளிட்டவைகளுக்காக பெரும் பங்காற்றியிருக்க வேண்டும்.
இந்த விருதிற்கு ஏராளமானோர் விண்ணப்பித்தாலும் யாரேனும் ஒரு நபர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு குழுவின் பரிந்துரை பேரிலேயே இந்த தேர்வு இருக்கும்.
அதேபோல் தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.

மேற்கூறிய தகுதிகள் உடையோர் தங்களது விவரங்களை தகுந்த ஆவணங்களோடு இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமை செயலகம், சென்னை-600 009 என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்று தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 30ம் தேதியே கடைசி நாள் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

Previous articleமுக்கிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி !
Next article‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!!