கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!!
தமிழக்தில் திமுக ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.அதன்படி 2 ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பின் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை அமல்படுத்த முடிவு செய்தது.தமிழக்தில் மொத்தம் 1.70 லட்சம் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பத்திருந்த நிலையில் சுமார் 70 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட்டன.இதனால் பல பெண்கள் ஏமாற்ற பட்டனர்.தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது ஒன்று ஆட்சி பொறுப்பேற்ற பின் செய்வது ஒன்றாக இருக்கிறது என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த பல பெண்கள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில் வசதி படைத்த பலர் இந்த திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
தாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.ரூ.1000 பெறுவதற்காக விண்ணப்பித்த எங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஆனால் எங்கள் வீட்டு ஓனர்களுக்களின் பெயர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.எதன் அடைப்படையில் இந்த திட்டம் செயல்படுத்த படுகிறது என்பது தெரியவில்லை என கஷ்டப்படும் தாய்மார்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளான நேற்று மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.முன்னதாக இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மகளிர்களின் வங்கி கணக்கிற்கு 10 பைசா அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது.மொத்தம் 1.6 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைய உள்ள நிலையில் ஏடிஎம் வழங்கும் தொடக்க விழா நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்த மற்ற மாவட்டங்களில் இந்த தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து அடடா இதனை பெண்களுக்கு ஒரே நாளில் ரூ.1000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டு வழங்க போகிறார்களா என்று நினைத்த நேரத்தில் அங்கு தான் ட்விஸ்ட் வைத்தது திமுக அரசு.எப்படி பிரச்சாரத்திற்கு கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக பொதுமக்களை காசு கொடுத்து கூட்டி வருவார்களோ அதே போல் இந்த திட்டத்தில் பயன் பெறாத பெண்களையும் உங்களுக்கு ரூ.1000 பெறுவதற்கான ஏடிஎம் வழங்கப்பட இருக்கிறது.விழாவில் கலந்து கொண்டு வாங்கிச் செல்லுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக பெண்களை வரவைத்துள்ளனர்.வந்த பெண்களை நீண்ட நேரம் காக்க வைத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகளையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்.
இதனால் உட்ச்சக்கட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்திய பெண்கள் எங்களுக்கு வேலை பொழப்பு இல்லையா? இதை நம்பி வந்து ஒரு நாள் வேலையே போச்சு.வயதான காலத்தில் ஏன் இப்படி அலைய விடுறீங்க? என்று பெண்கள்,வயதானவர்களின் மனக்குமுறல் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.இதனை பார்த்த நெட்டிசன்கள் இது தான் திராவிட மாடலா? உரிமைத்தொகை என்பது எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று ஆனால் திமுக அரசு இந்த விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.