ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்!

0
192
Arul Vot Siddhar who gave money to the audience in front of the audience! Happy people!
Arul Vot Siddhar who gave money to the audience in front of the audience! Happy people!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்!
வருசநாடு அருகே தும்மகுண்டு  கிராமத்தில்  சீலமுத்தையாசுவாமி ஆசியால் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் பெறும் விமர்சியாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர் கோடிகள் சீல‌ முத்தையா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி தாமோதரன் செய்திருந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அனைவரும் சிறப்பு பூஜையில்  கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் பெருக்கு தினம் மிக சிறப்பாக நடைபெறும், இதில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும்  பிடிக்காசு பணம் கொடுத்து பிரசாதம் வழங்கப்படுவது வாடிக்கையா இருந்து வருகிறது.
இதற்காக வரிசையில் பல பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து வாங்கி செல்வார்கள் மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் பெருக்கு  தினத்தில் கோவிலுக்கு வந்து சென்றால் சீலமுத்தையா சுவாமியிடம்‌‌  ‌அருள் பெற்றுச் செல்வதால் வருசமுழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Previous articleபாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி!
Next articleபெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here