‘வாரிசு என்பதற்காக மட்டும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ அதிதி ஷங்கருக்கு ஆதரவாக அருண் விஜய்

0
307

‘வாரிசு என்பதற்காக மட்டும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ அதிதி ஷங்கருக்கு ஆதரவாக அருண் விஜய்

நடிகை அதிதி ஷங்கர் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கிறார். தனது சினிமா கேரியரின் ஆரம்பகட்டமே அவருக்கு முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்போடு அமோகமாக தொடங்கியுள்ளது.

இதற்கெல்லாம் அவர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற ப்ராண்ட்தான் உதவுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அதிதிக்கு விருமன் திரைப்படத்தில் வாய்ப்புக் கிடைக்க, இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் சூர்யா (விருமன் படத்தின் தயாரிப்பாளரும் இவரே) ஆகியோருக்கு மேனேஜராக இருக்கும் தங்கதுரை என்பவர்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபல நடிகைகளுக்கு அவர் மேனேஜராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாரிசு நடிகை என்று விமர்சிக்கபடும் அதிதிக்கு மற்றொரு வாரிசு நடிகரான அருண் விஜய் ஆதரவு அளித்துள்ளார். மேலும் “அவர் வாரிசு நடிகர்கள் என்பதற்காக ரசிகர்கள் படம் பார்க்க வரமாட்டார்கள். திறமை வேண்டும். மேலும் வாரிசு ஆக இருப்பதால் அவர்களின் தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பும் உள்ளது. அதிதிக்குள் பல்வேறு திறமைகள் உள்ளன. அவருக்கு என் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

Previous articleஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்
Next article‘எப்படி லீக் ஆகுதுன்னே தெரியலயே…’ வாரிசு இயக்குனர் போட்ட கண்டீஷன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here