அஜித்& விஜய் பட இயக்குனரோடு கைகோர்த்த அருண் விஜய்… வெளிநாட்டில் விரைவில் படப்பிடிப்பு!

Photo of author

By Vinoth

அஜித்& விஜய் பட இயக்குனரோடு கைகோர்த்த அருண் விஜய்… வெளிநாட்டில் விரைவில் படப்பிடிப்பு!

நடிகர் அருண் விஜய்யின் சமீபத்தைய திரைப்படமான யானை நல்ல வரவேற்பைப் பெற்றது.

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து சமீபத்தில் அவர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான யானை படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. யானை படத்தில் பிரியா, பவானி, சங்கர், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் அம்மு ,அபிராமி ,யோகி பாபு என பலர் நடித்திருந்தனர்.

அடுத்தடுத்த ஹிட்களால் முன்னணி நடிகராகியுள்ள அருண் விஜய் தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகிறார். நாக சைதன்யா வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதை போல கிரீடம் மற்றும் தலைவா போன்ற படங்களை இயக்கிய ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.