தமிழ் சினிமாவை அலறவிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்’ பற்றி உருவாகும் வெப் சீரிஸ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Photo of author

By Vinoth

தமிழ் சினிமாவை அலறவிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்’ பற்றி உருவாகும் வெப் சீரிஸ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து சமீபத்தில் அவர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான யானை படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் நடிப்பில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. இந்த சீரிஸை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய்யை வைத்து குற்றம் 23 மற்றும் பார்டர் ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார்.

இந்த தொடர் தமிழ் சினிமாவில் பைரஸியாக பல படங்களை வெளியான நாளே வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளத்தை நடத்தியவர்களை கண்டுபிடிக்கும் தொடராக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த தொடரின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று மாலை டிரைலர் வெளியாக உள்ளது. விரைவில் இந்த தொடர் சோனி லிவ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

http://https://www.instagram.com/p/CgEJhccLtxG/?utm_source=ig_web_copy_link