பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் வழக்கு-உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!

0
188
#image_title

காவல்துறை அதிகாரி பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் தனது வழக்கு விவரங்களை தனக்கு வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பல் உடைக்கப்பட்ட விவகாரம் பாதிக்கப்பட்ட அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது நாளை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது.

குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல் பிடுங்கி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, கைது செய்யப்பட்ட விவகாரம், மருத்துவ பரிசோதனை, சிறையில் அடைத்த சிறை சான்று, மற்றும் அம்பாசமுத்திர JM நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விவரங்களை தனக்கு தர உத்தரவிடக்கோரி பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்.

அருண்குமார் தனது மனுவில் கூறியுள்ளதாவது, என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் போலீசார் வைத்து என்னை கடுமையாக தாக்கினார்கள்.

எனது 4 பற்களும் உடைக்க பட்டன, பிறகு இந்த வழக்கில் என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் என் மீது பதியபட்ட வழக்கு விவரங்களை தர உத்தரவிட கோரி அம்பாசமுத்திர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தேன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது.

எனவே அம்பாசமுத்திர நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து என் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் தர உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரனைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபன் ஆஜராகி இந்த வழக்கு மிகவும் காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டு பல் பிடுங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அருண்குமார் தனது வழக்கு ஆவணங்களை தரக்கோரி அம்பாசமுத்திரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது இது ஏற்றுக்கொள்ள முடியாது சட்டவிரோதம் வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி அருண்குமார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது மனு நிராகரிக்கபட்டதா அல்லது திருப்பி அனுப்பபட்டதா நாளை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

Previous articleசிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அரசு பஸ் மற்றும் சொகுசு கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து!
Next article1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!!