அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு

0
101

டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு வாட் வரி விதிக்கிறது. . இந்த நிலையில்  டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் வாட் வரி ஏறத்தாழ பாதியாக குறைத்து விட்டதால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் என்ற அளவுக்கு குறைந்து விடும். 82 ரூபாய் என்ற அளவுக்கு ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் விற்பனையாகியது. அது இனிமேல், 73 ரூபாய் 64 காசுகளாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று பிற மாநிலங்களும் வாட் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிறமாநில மக்களிடையே எழுந்துள்ளது.

Previous articleஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய இயலாது! உச்ச நீதிமன்றத்தில் UGC!
Next article‍புதிய கல்விக்கொள்கை ‘என்னம்மா நீங்க இப்படி பன்றிங்களேமா’ என்று புலம்பும் மக்கள்!