அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் – டெல்லியில் பாஜக போராட்டம்!!
மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக நேற்று, டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜரான, அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
என டெல்லி சட்டசபைக்கு முன் பாஜக தொண்டர்கள் போராட்டம்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின் கீழ் ஆம்ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது.
அக்கட்சியில் 2021-2022 ஆண்டிற்கான மதுபான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அதில் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இதை ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் பலக்கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் பாஜக-வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றம் குறித்து, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், புதுடெல்லியின் துணை முதல்வர் மற்றும் காவல் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலத்தின் மேல்சபையின் உறுப்பினரான கவிதாவிடம் சி.பி.ஐ. பல மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். இந்த ஊழல் வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய சாட்சி என்பதால், அவரை டெல்லியில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகியுள்ளார்.