ஆஷ்லி பார்ட்டி திடீர் விலகல்

0
135
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி ‘கிராண்ட்ஸ்லாம்’  என்ற அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் தொடங்குகிறது.  இந்த போட்டி  செப்டம்பர் 13-ந்தேதி முடிவடைகிறது.  கொரோனாவின் ருத்ரதாண்டவத்தால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்த  போட்டிகளும் நடக்கவில்லை. இதன் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தாலும், மறுபக்கம் அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் வீரர், வீராங்கனைகள் ஒருவித கவலையில்  உள்ளனர். ரசிகர்கள் இன்றி  இந்த போட்டி நடத்தப்படுகிறது.  இந்த நிலையில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி  அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 24 வயதான ஆஷ்லி பார்ட்டி பேசுகையில், ‘நானும், எனது அணியிம் இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.
சின்சினாட்டி  மற்றும் அமெரிக்க ஓபன் இரண்டுமே எனக்கு பிடித்த போட்டிகள்தான் ஆனால் தற்போது கொரோனா காரணத்தினால் விளையாடும் எண்ணம் இல்லை வேறு வழியின்றி இப்படிபட்ட முடிவை எடுத்திருக்கிறேன். அமெரிக்க ஓபனில் அடுத்த ஆண்டு விளையாடுவதை  எதிர்நோக்கி உள்ளேன். செப்டம்பர் மாதம் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வது குறித்து இனி வரும் வாரங்களில் முடிவு செய்வேன்’ என்றார். ஏற்கனவே விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியன் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) ஆகியோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டனர். அதே சமயம் முன்னாள் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அமெரிக்க ஓபனில் களம் இறங்க இருப்பதாக அவரது குழுவினர் தரப்பு தெரிவித்துள்ளது.
Previous articleரோகித் சர்மா மிக சிறந்த கேப்டன் – சுரேஷ் ரெய்னா
Next articleவலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் இளைஞர்கள்!