சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று முதல் தொடக்கம் அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0
360
Assembly Budget Session! The government's announcement from today!
Assembly Budget Session! The government's announcement from today!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று முதல் தொடக்கம் அரசு வெளியிட்ட அறிவிப்பு!

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் இன்று தொடங்குகிறது. மேலும் இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை புதுவையில் மார்ச் மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன் பிறகு அந்த நடைமுறையானது மாற்றப்பட்டது.

மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகு முழுமையான பட்சத்தில் தாக்கல் செய்யப்பட்டது.என் ஆர் -காங்கிரஸ் -பாஜக ஆட்சி அமைந்தது முதல் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

மேலும் இன்று புதுச்சேரி சட்டசபை கூடுகிறது இது பட்ஜெட் கூட்டுத்தொடர் என்பதால் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகின்றது. மேலும் இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கியதும் அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்வர் எனவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து மற்றும் மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!
Next articleநேற்று சர்வதேச மகளிர் தின விழா! முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு!