நேற்று சர்வதேச மகளிர் தின விழா! முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு!

0
144
International Women's Day yesterday! CM Stalin's speech!
International Women's Day yesterday! CM Stalin's speech!

நேற்று சர்வதேச மகளிர் தின விழா! முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு!

நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  மகளிர் உரிமை துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதில் அமைச்சர்கள் கா பொன்முடி, பி கே சேகர்பாபு, கீதாஜீவன், கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன், எம்பி பரந்தாமன், எம் எல் ஏ உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் அந்த நிகழ்ச்சியின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர் பிரியா, சமூக நலத்துறை இயக்குனர் ரத்தனா, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ஆகியோர் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களை பெற்றனர்.

மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில்  இந்த நாட்டின் வளர்ச்சி மகளிர் கையில் தான் உள்ளது. அதனால் மகளிர்களை  வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை வாழ்த்தி கொண்டு இருக்கிறோம் என கூறினார். பெண்ணாக பிறப்பது மட்டுமே பெருமைக்குரியது அல்ல. அத்தகைய பெண் ஒருவர் சமூகத்தை வழிநடத்துபவராக உயர்ந்து நிற்பதையே நாம் விரும்புகிறோம்.

இந்த நாடும் அதனை தான் விரும்புகிறது. மார்ச் 8ஆம்  தேதி மகளிர்களுக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கும், மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கிய நாளாக அமைந்துள்ளது. இந்த உலகில் எந்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள் மட்டுமே. கல்வி சமூக நீதி பெண் உரிமை திட்டங்களை அதிக அளவில் திராவிட மாடல் அரசால் நாங்கள் தற்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உயர்கல்வி, பள்ளிக்கல்வி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமை திட்டங்களின் மூலமாக தமிழ் சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெறும் அளவில் நிகழ்ந்து வருகின்றது. மேலும் புதுமைப்பெண் என்ற உன்னத திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருவதினால் இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படுகின்றது என கூறினார்.

author avatar
Parthipan K